வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஹரிகரன்: அமெரிக்காவை ஒதுக்கும் வியூகம்!


நவம்பர் 16ஆம் திகதி நடந்த ஜனாதி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர், இலங்­கையை மையப்­ப­டுத்தி இந்­தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீவி­ர­மான நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரும் நிலையில், மேற்­கு­லகம் சற்று ஓர­மாக ஒதுங்­கி­யி­ருந்து கவ­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது. கோத்­தா­பய ராஜபக்ஷவைச் சந்­திக்க இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர், பாகிஸ்தான் வெளி­வி­வ­கார அமைச்சர் ஆகியோர் ஓடி வந்­தனர். சீனாவில் இருந்தும் சிறப்பு பிர­தி­நிதி கொழும்பு வந்தார். ஆனால் அமெ­ரிக்­காவில் இருந்து இதுவரை எவரும் வர­வில்லை. அமெ­ரிக்­காவும் ஐரோப்­பிய ஒன்­றி­யமும், புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவு­டனோ, அல்­லது புதிய அர­சாங்­கத்­து­டனோ அதிகம் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்ளும் நகர்­வு­களை முன்­னெ­டுக்­க­வில்லை.


கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெற்ற­தாக அறி­விக்­கப்­பட்­டதும், அன்று மாலையே அவ­ரது வீட்டுக்குச் சென்று சந்­தித்து வாழ்த்துக் கூறியிருந்தார் இந்­திய தூதுவர். சீனத் தூது­வரும் மறுநாள் அவரைச் சந்­தித்து வாழ்த்துக் கூறினார். ஆனால் அமெ­ரிக்கத் தூதுவர் சமூக ஊட­கங்­களில் வாழ்த்துக் கூறி­ய­துடன் சரி. கோத்­தா­பய ராஜபக்ஷ ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற பின்னர், நான்கு நாட்கள் கழித்தே, நவம்பர் 22ஆம் திகதி தான்- அமெ­ரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறி­யி­ருந்தார். அது­போ­லவே ஐரோப்­பிய நாடு­களின் தூது­வர்­களும் கோத்­தா­பய ராஜபக்ஷவைச் சந்­திக்க ஆர்வம் காட்­ட­வில்லை. காலம் தாழ்த்­தியே சந்தித்து வருகின்­றனர்.


இவற்­றுக்கு அப்பால், ஆட்சி மாற்றத்தை அடுத்து பொறுப்­பேற்கும் புதிய அர­சாங்­கத்­துக்கு, நாடு­களின் தலை­வர்கள் வாழ்த்­து­களை பரி­மாறிக் கொள்­வது வழக்­க­மான போதும், மேற்கு­லக தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து அவ்­வா­றான வாழ்த்­துகள் வந்­தி­ருக்­க­வில்லை. ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் தென்­னி­லங்­கையில் தீவி­ர­மாகப் பரப்­பப்­பட்ட ஒரு விடயம் அமெ­ரிக்க எதிர்ப்புக் கொள்கை. ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷவுக்கும், அமெ­ரிக்­கா­வுக்கும் மிக நெருங்­கிய தொடர்­புகள், உற­வுகள் இருந்­த­போதும், அவரை அதி­கா­ரத்­துக்குக் கொண்டு வரு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­தங்­களில் அமெ­ரிக்க எதிர்ப்பு  யுக்­தியும் ஒன்­றாக இருந்­தது.


2015இல் மைத்­திரி – ரணில் கூட்டு அர­சாங்கம் பத­விக்கு வந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு, இலங்­கையில் சீனாவின் நகர்­வு­க­ளுக்கு எதி­ரான வியூ­கங்­களை வகுப்­பதில் அமெ­ரிக்கா தீவிர ஈடு­பாடு காட்டி வந்தது. ஆனால், தற்­போ­தைய ஆட்சி மாற்றம் அமெ­ரிக்­கா­வுக்குச் சாத­க­மான ஒன்­றாக இருக்­க­வில்லை. அமெ­ரிக்­காவும் அவ்­வாறு நோக்­கு­வ­தாகத் தெரிய­வில்லை. தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­குலகம் வில­கியே இருக்­கி­றது. இந்த விலகல் மேற்­கு­ல­கினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டதா? தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டதா என்­பது தெரி­ய­வ­ரவில்லை. எனினும் தற்­போ­தைய அர­சாங்கம் அமெ­ரிக்க எதிர்ப்பு நிலைப்­பாட்டை கடைப்­பி­டிக்கும் ஒன்று என்­பதில் சந்­தே­க­மில்லை.


சர்­வ­தேச சக்­தி­களின் மோதல்களுக்குள் அகப்­பட்டுக் கொள்­ளாமல் நடு­நிலை வகிப்­பதே தமது நிலைப்­பாடு என்றும், எல்லா நாடு­க­ளு­டனும் நட்­பு­ற­வுடன் இருப்­பதே தமது கொள்கை என்று கூறி­னாலும், அமெ­ரிக்கா விட­யத்தில் கூடுதல் எச்­ச­ரிக்­கையை தற்­போ­தைய அர­சாங்கம் கடைப்­பி­டிக்­கி­றது. கோத்­தா­பய ராஜபக்ஷ பத­விக்கு வந்­ததும், மனித உரி­மை­களை மதிக்க வேண்டும், பொறுப்­புக்­ கூறல் நீதி, நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் மைக் பொம்­பியோ, வெளி­யிட்­டி­ருந்த கருத்து, அர­சாங்­கத்­தினால் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய ஒன்­றாக இருக்­க­வில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில், இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வி­ருக்­கி­றது. முன்­னைய அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட்­டதா என்­பது குறித்த மதிப்­பீடும் இடம்­பெ­ற­வி­ருக்­கி­றது. ஆனால், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின், 30/1 தீர்­மா­னத்­துக்கு முன்­னைய அர­சாங்­கத்­தினால் கொடுக்­கப்­பட்ட இணை அனு­ச­ர­ணையை விலக்கிக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக, வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்த்­தன கூறி­யிருக்­கிறார்.


ஆக, மனித உரி­மைகள், பொறுப்­புக்­கூறல், நீதி  போன்ற விட­யங்­களில் மேற்­கு­லக விருப்­பங்­க­ளுக்கு ஏற்ப நடந்து கொள்ள முடி­யாது என்­பதை இலங்கை அர­சாங்கம் மிகத் தெளி­வாக கூறி­யி­ருக்­கி­றது. நாட்டின் இறை­மைக்கு ஆபத்­தான எதையும் செய்­ய­மாட்டோம் என்று தற்­போ­தைய அர­சாங்கம் கூறு­கி­றது. ஜெனீவா தீர்­மான இணை அனு­ச­ர­ணையை அல்­லது அங்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தியை, நாட்டின் இறை­மைக்கு எதி­ரா­னது என்று காட்­டிக்­கொள்ள முனை­கி­றது கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்கம். ஏற்­க­னவே சிங்­கள பௌத்த வாக்­கு­களால் வெற்­றி­பெற்ற அவ­ருக்கோ, அவ­ரது தரப்­பி­ன­ருக்கோ, நாட்டின் இறைமை பற்­றிய பீதியை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம், பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் கவ­னத்­தையும், ஆத­ர­வையும் பெற்றுக் கொள்­வது மிகச்­சு­லபம். மார்ச் மாத­ம­ளவில்  பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யிலும், அதே மாதத்தில், ஐ.நா மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்­தொடர் நடக்­க­வுள்ள நிலை­யிலும், சிங்­கள பௌத்த பெரும்­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களைக் கவ­ரு­வ­தற்கு இது­போன்ற பிர­சா­ரங்கள் முக்­கி­ய­மா­னவை. அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் பொறுப்­புக்­கூறல், நீதி, மனித உரி­மைகள் போன்­ற­ன­வற்றை முதன்­மை­யான இலக்­கு­க­ளாக கொண்­டி­ருக்­க­வில்லை. இலங்­கையில் தனது பூகோள அர­சியல் நலன்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான ஒரு மூலோ­பா­ய­மா­கவே அதனைக் கையாண்டு வந்­தி­ருக்­கி­றது.



சீன ஆதிக்­கத்தை உடைத்து, இலங்­கையைத் தமது பக்கம் இழுப்­ப­தற்­கா­கவே ஜெனீ­வாவை பயன்­ப­டுத்தி வந்­தது அமெ­ரிக்கா. ஆனால் ஜெனீவா அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணி­யாத ஒரு அர­சாங்கம் கொழும்பில் உரு­வா­கி­யி­ருக்­கின்ற நிலையில், சீனாவைக் கையா­ளு­வ­தற்­கான ஒரு யுக்­தி­யையும், அமெ­ரிக்க நலன்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான  யுக்­தி­யையும் வகுத்துக் கொள்­வ­தற்­கான ஒரு அவ­கா­சத்தை அமெ­ரிக்கா தேடிக் கொண்­டி­ருக்­கி­றது. இந்த இடை­வெ­ளியைப் பயன்­ப­டுத்திக் கொண்டு தான், அமெ­ரிக்­கா­வையும் மேற்­கு­ல­கத்­தையும் வெட்­டி­யா­டு­கின்ற  யுக்­தியைக் கையாள இலங்கை முனை­கி­றது. கடன்­களைப் பெறு­வ­தற்குப் பதி­லாக, இந்­தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து, வெளி­நாட்டு நேரடி முத­லீ­டு­களைப் பெறு­வதில் தான் தற்­போ­தைய அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தாக அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல கூறி­யி­ருக்­கிறார். இந்­தியப் பய­ணத்­தின்­போது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, “தி ஹிந்­து“­வுக்கு அளித்­துள்ள செவ்­வியில், இந்­தியா, ஜப்பான், சிங்­கப்பூர், அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களை இலங்­கையில் நேரடி முத­லீ­டு­களைச் செய்ய வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.


இந்த இரண்டு கருத்­துக்­க­ளிலும், அமெ­ரிக்க மற்றும் ஐரோப்­பிய நாடுகள் மிகக் கவ­ன­மாக தவிர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை கவ­னிக்க வேண்டும். இலங்­கையில் வெளி­நாட்டு நேரடி முத­லீ­டு­களில் அமெ­ரிக்­கா­வையோ, ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளையோ அழைக்­கின்ற மன­நி­லையில் தற்­போ­தைய அர­சாங்கம் இல்லை. அதற்கு முக்­கி­ய­மா­ன­தொரு காரணம், அமெ­ரிக்­காவின் 480 மில்­லியன் டொலர் மிலே­னியம் சவால் நிறு­வனக் கொடையை தற்­போ­தைய அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது. ஆனால், இந்­தி­யாவின் 450 மில்­லியன் டொலர் கட­னு­த­வியை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஏற்றுக் கொண்­டி­ருக்­கிறார். ஒரு பக்­கத்தில் அமெ­ரிக்கா கொடை­யாக வழங்க முன்­வந்த நிதியை நிரா­க­ரித்துக் கொண்டு, கிட்­டத்­தட்ட அதற்குச் சம­மான அளவு கட­னு­த­வியை இந்­தி­யா­விடம் ஏற்றுக் கொண்­டி­ருப்­பதில் இருந்தே, கொழும்பின் வியூ­கத்தைப் புரிந்து கொள்ள முடி­கி­றது. சீனாவை தவிர்க்க முடி­யாத வணிகப் பங்­காளி என்று அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருக்கும் கோத்­தா­பய ராஜபக் ஷ அமெ­ரிக்­காவைப் பற்றி மூச்­சுக்­கூட விட­வில்லை. இதி­லி­ருந்தே அமெ­ரிக்­காவை தூர விலக்கி வைக்கும் முடிவில் கொழும்பு இருக்­கி­றது என்­பதை புரிந்து கொள்ள முடியும்.


அவ்­வாறு அமெ­ரிக்­கா­வையும், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தையும் விலக்கி வைத்­தி­ருப்­ப­தற்கு, இந்­தி­யா­வையும், ஜப்­பா­னையும் பயன்­ப­டுத்திக் கொள்ள கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்கம் முற்­ப­டு­கி­றது. இந்­தி­யாவை கைக்குள் போட்டுக் கொள்­வதன் மூலம், தனக்­கான பாது­காப்பைத் தேடிக் கொள்­ளலாம் என்று நினைக்­கி­றது. இந்­தி­யா­வுக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தாத வரையில், அதனுடன் இணக்கப் போக்கில் செயற்பட முடியும் என்பது அரசாங்கத்தின் கணக்கு. இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தேவையற்ற தலையீடுகளை தடுக்கவும் தவிர்க்கவும் இந்தியாவையே பயன்படுத்தப் போகிறது ராஜபக் ஷ அரசாங்கம். குறிப்பாக , ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடிகளை இந்தியாவையும், சீனாவையும் கொண்டு சமாளிக்கும் திட்டங்கள் அதனிடம் உள்ளன. அமெரிக்காவும், இந்தியாவும், பொருளாதார, பாதுகாப்பு ரீதியாக மிகநெருக்கமான நிலைக்கு வந்து விட்டன. ஆனாலும், அண்டை நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் நலன்களை புறக்கணித்துச் செயற்படும் நிலையில் அமெரிக்கா இருக்குமா என்பது சந்தேகம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தான் அமெரிக்கப் பொறியை கடந்து செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறது கொழும்பு.


இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கட்டுரை எழுத்தாளர் - ஹரிகரன்