Latest News: அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி கணிசமாக அதிகரிப்பு
Tamil news: இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் படி, 1 அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 343.97 ஆகவும், விற்பனை விலை 356.73 ரூபாயாகவும் இன்று(02.03.2023) காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 343.97 ஆகவும், விற்பனை விலை 356.73 ஆகவும் இன்று(02.03.2023) காணப்படுகின்றது.
தற்சமயம் நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுவரும் நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது.
நிபுணர்களின் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு எதிர்காலத்தில் ரூபாயின் மதிப்பு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.