Health: தக்காளி நல்லது தானா???
Tamil: வெயில் காலம் வந்தாலே பலருக்கும் தோல் பிரச்சினைகள் வந்து விடுகின்றது. கோடைகால சரும பிரச்சினைகளில் இருந்து காக்கும் தக்காளியின் பயன்களை குறித்து தெரிந்துக் கொள்வது முக்கியம்.
தோல் பராமரிப்புக்கு தேவையான கரோட்டின் மற்றும் லுடீன் உள்ளிட்டவை தக்காளியில் செறிவாக உள்ளது.
அந்தவகையில்,
- தக்காளியை சாறினை பிழிந்து முகத்தில் தொடர்ச்சியாக பூசி வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் நீங்கும்.
- தக்காளி சாறுடன் அரை தேக்கரண்டி தேன்இ பப்பாளி துண்டுகள் சேர்த்து பிசைந்து தோலில் தடவினால் பொலிவடையும்.
- தக்காளிச்சாறு சருமத்துளைகளை இறுக்கமாக்கி நல்ல நிறத்தை தருகிறது.
- தக்காளியுடன் பால்இ முல்தானி சேர்த்து பிசைந்து தடவி வந்தால் இறந்த செல்கள் நீங்கி வெண்மையாக மாறும்.
- கோடைக்கால வறண்ட சருமத்தை பளபளப்பாக்க தக்காளி சாறுடன் வாழைப்பழம்இ ஆலிவ் ஆயில் சேர்த்து தடவி வரலாம்.
- தக்காளி சாறுடன் புதினா இலைகளை சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவிவர முகப்பருக்கள் நீங்கும்.
Labels:
மருத்துவ குறிப்பு