Health: சாப்பிடும்போது மறந்தும்கூட இதை செய்யாதீங்க!!!
Tamil: அன்றாட செயற்பாடுகளில் அத்தியாவசியமான ஒன்று தான் உணவு. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுடன், உணவு சாப்பிடும்போது சிலதை செய்யாமல் இருப்பதும் அந்த சத்துக்கள் உடலில் சேர உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாப்பிட முன் தண்ணீர் குடிப்பதால் குடல் விரிவாகி சாப்பாடு எளிதில் உள்ளே செல்ல உதவும். ஆனால் சாப்பிடும்போது இடையே அடிக்கடி அதிக தண்ணீர் குடிப்பது வயிற்றை நிரப்பு சாப்பிட முடியாது போய்விடும்,
- சாப்பிடும்போது மற்றவர்களிடம் பேசிக்கொண்டே சாப்பிட கூடாது,
- உணவு அருந்துவதற்கு 15 நிமிடங்கள் முன் நொறுக்கு தீனிகள் போன்றவற்றை சாப்பிட கூடாது,
- உணவுடன் பொரியல், கூட்டு தவிர்த்து வறுத்த எண்ணெய் பொருட்கள், நொறுக்கு வகைகளை சேர்க்க கூடாது,
- சாப்பிட்ட பின்பு அதிக இனிப்பு கொண்ட பதார்த்தங்களை அதிகமாக சாப்பிட்டால் சமிபாட்டு பிரச்சினை ஏற்படும்,
- சாப்பிட்ட பின்பு ஐஸ்கிரீம் உள்ளிட்ட மிகவும் குளிர்ச்சியான பொருட்களை சுவைப்பதை தவிர்ப்பது நல்லது.
Labels:
மருத்துவ குறிப்பு