நடுக்கடலில் கப்பலில் இருந்து விழுந்த 7 வயது சிறுவன்: காப்பாற்ற கடலில் குதித்த தாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்
போலந்தில் இருந்து ஸ்வீடன் நோக்கி சென்ற கப்பலில் இருந்து கடலில் விழுந்த தாய் மற்றும் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடலுக்குள் விழுந்த 7 வயது சிறுவன்
போலந்து துறைமுகம் க்டினியாவில் இருந்து ஸ்வீடன் நாட்டு துறைமுகமான கார்ல்ஸ்க்ரோனா நோக்கி ஸ்டெனா ஸ்பிரிட்(Stena Spirit) என்ற சொகுசு பயணிகள் கப்பல் சென்று கொண்டிருந்தது.
அப்போது கப்பலில் இருந்து 7 வயது சிறுவன் ஒருவன் சுமார் 65 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்தான்.
சிறுவன் கடலில் விழுந்ததை தொடர்ந்து, சிறுவனை காப்பாற்றும் நோக்கில் அவரது 36 வயதுடைய தாயும் கடலுக்குள் குதித்தார்.
இதையடுத்து தாயும், மகனும் கடலில் விழுந்த சம்பவம் அறிந்த ஸ்டெனா ஸ்பிரிட்(Stena Spirit)கப்பல் குழுவினர் அவசர நிலையை அறிவித்துவிட்டு, சம்பவ இடத்திற்கு திரும்பி சென்றனர்.
தாயும் மகனும் உயிரிழப்பு
மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நேட்டோ படைகளின் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தாயும், 7 வயது சிறுவனையும் மீட்டு கார்ல்ஸ்க்ரோனாவில்(Karlskrona) உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் போலந்து நாட்டின் குடிமக்கள் என நம்பப்படும் தாயும், சிறுவனும் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
மேலும் சிறுவன் கடலுக்குள் விழுந்ததை அடுத்து அவரது காப்பாற்ற பின் தொடர்ந்து கடலுக்குள் குதித்த சிறுவனின் தாயும் நீரில் மூழ்கியதில் உயிரிழந்துள்ளனர் என்பதை ஸ்வீடன் கடல்சார் நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.