Latest news: விசேட தேவை உடையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!
Tamil news: விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோயாளர்கள், புதிதாக நிவாரணத்தை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு சமூக வலுவூட்டல் அமைச்சினூடாக உடனடியாக கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவடைந்தாலும் தொடர்ச்சியாக, ஜனாதிபதி செயலகம், அரசாங்க அதிபர் அல்லது பிரதேச செயலகங்களுக்கு விண்ணப்பங்களை முன்வைக்க முடியும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(11.07.2023) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Pages*
*Instagram*
*WhatsApp group*
*Twitter* https://twitter.com/NaranMedia
Labels:
உள்நாட்டுச் செய்திகள்