Business: அன்று ஐஐடி நுழைவுத் தேர்வில் தோல்வி! இன்று 8500 கோடிக்கு அதிபதி - ஒரு வெற்றிக்கதை
Tamil: இணைய பிரபலம் மற்றும் தொழிலதிபர் அலக் பாண்டே பிசிக்ஸ் வாலா நிறுவனத்தின் மகத்தான வெற்றிக்கு மூளையாக உள்ளார்.
இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.780 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட (ரூ. 233 கோடி) 300 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
ஒரு தொழிலதிபராக பாண்டேவின் வாழ்க்கை 2014 இல் அதே பெயரில் தனது யூடியூப் சேனலைத் தொடங்கியபோது தொடங்கியது.
சில காலம் கழித்து, ஒரு எட்-டெக் (Education Technology) நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 40 கோடி சம்பளம் தருவதாக அவரை அணுகியது, ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.
அவர் தனது சொந்த நிறுவனத்தை பிசிக்ஸ் வாலா என்ற பெயரில் உருவாக்கினார். 2021-2022 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 900 சதவீதம் உயர்ந்தது. பாண்டே 12ம் வகுப்பு படிக்கும் போது, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தார்.
அதற்காக மாதம் ரூ. 5000 வாங்கினார்.
பள்ளிக்குப் பிறகு, கான்பூரில் உள்ள ஒரு சிறந்த கல்லூரியில் பொறியியல் படிக்கும் போது தனது யூடியூப் சேனலைத் தொடங்க முடிவு செய்தார் அலக்.
YouTube சேனல் பிரபலமடைந்து அங்கீகாரம் பெறத் தொடங்கியதும், அலக்கும் அவரது சகா பிரதீக் மகேஸ்வரியும் மொபைல் செயலியைக் வடிவமைத்தனர்.
அலகாபாத்தைச் சேர்ந்த பாண்டே, பத்திரிகையாளரான ஷிவானி துபேவை மணந்தார்.
ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத அலக், இன்று நாட்டின் முக்கியமான எட்-டெக் நிறுவனத்தின் நிறுவனராக உயர்ந்துள்ளார்.
பிசிக்ஸ் வாலா ஆப் JEE, NEET ஆகியவற்றைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது.
இந்த செயலியில் 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தினமும் குறைந்தது 1.5 மணிநேரம் செலவிடுகின்றனர்.
Physicswallah இந்தியாவின் 101-வது யூனிகார்ன் ஆனது, அதாவது 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டிற்கு மேல் உள்ள நிறுவனம்.
பாண்டேவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8500 கோடி. யூடியூப்பில் அவருக்கு 9.1 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.