வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீண்டும் போராட்டம்!!!



 Tamil news: மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம்(07.07.2023) காலை சுமார் 11 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 


அதாவது மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்கள் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து கருத்துத்தெரிவித்த மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்கள் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா அவர்கள்,


"ஐக்கிய நாடுகள் சபையின் 53வது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். தொடர்ந்தும் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுக்க முடியாத பொருளாதார சூழலில் நாங்கள் உள்ளோம்.

எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று ஐ.நா சபையை நாங்கள் இவ்வளவு காலமும் நம்பி வந்தோம். ஆனால் அந்த நீதியும் தாமதமாகின்றது. இந்த அமர்விலாவது எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இந்த போராட்டத்தை வீதிகளில் நின்று முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் எமக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. நாங்கள் உயிருடன் இருக்கும்வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் தொடரும்.

மேலும் தற்போது மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.தற்போது முல்லைத்தீவிலும் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் அதிக மனித புதைகுழிகளை கண்டுபிடிக்கமுடியும். வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு சென்ற பிள்ளைகள் இல்லை என்றால் அவர்கள் தான் கொலை செய்து புதைத்திருக்க வேண்டும்.

இராணுவ முகாம்களில் புதைக்கின்றமையினால் தான் அவர்கள் காணிகளை விடுவிக்கின்றார்கள் இல்லை. அதனாலேயே சிங்கள மக்களை குடியேற்றவும், புத்தகோவிலை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கின்றார். இதன் காரணமாக மனித புதை குழிகள் மூடி மறைக்கப்படும். எனவே ஐ.நா கூட்டத்தொடரிலாவது எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" 

                                                                                            என அவர் மேலும் தெரிவித்தார்.



மேலும் சிறிது நாட்களுக்கு முன் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் மனிதபுதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*

*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*

மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network
*Facebook Pages* 



*Instagram*

*WhatsApp group*