வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Business: லாக்டவுன் நேரத்து சாக்லெட் ஆசையால் கோடீஸ்வரனாகிய 19 வயது இளைஞர்!!!

 


   Tamil news: கோகம், ஐஸ் ஆப்பிள் போன்ற உள்நாட்டில் விளையும் பழங்களை ஆராய்ந்த திக்விஜய்இ சாக்லேட்டுடன் எந்தெந்த பழங்கள் நன்றாகப் பொருந்துகின்றன என்பதைக் கண்டறிய முயன்றார்.


3 ஆண்டுகளுக்கு முன்பு, Covid19 தொற்றுநோய் தாக்கியபோது ​​உலகமே நின்றுபோனது போலிருந்தது. 


இதனால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கிப் போனார்கள். 


தோட்டம், சமையல், சிறு வணிகங்கள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். 


அப்போது உதய்பூரைச் சேர்ந்த 16 வயதான திக்விஜய் சிங்கின் கதையும் இதேபோல் தான் இருக்கின்றது.


'பள்ளி ஆன்லைனில் நடந்ததால் எனக்கு நிறைய ஓய்வு நேரம் இருந்தது. சுவாரசியமான மற்றும் வேடிக்கையான ஒன்றில் எனது எனெர்ஜியை முதலீடு செய்ய விரும்பினேன்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, நான் வீட்டில் சாக்லேட் தயாரிக்க ஆரம்பித்தேன்.

இது எனது பிராண்டின் தொடக்கமாக இருந்தது' 

என்று அவர் தி பெட்டர் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்தார்.


திக்விஜய்க்கு இப்போது வயது 19. சாரம் நிறுவனத்தை நடத்தும் அவர் சுயமாக சாக்லேட் செய்ய கற்றுக்கொண்டார். இதன்மூலம் அவர் டெல்லி, பெங்களூரு, உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு 2 டன் சாக்லேட்டுகளை விற்றுள்ளார். 

திக்விஜய்யின் முயற்சியில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் தாவரவியல் பாரம்பரியம் மற்றும் பல்லுயிரியலை சமையல் வரைபடத்தில் வைக்க அவர் நாட்டுப்புற பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்களான நாவல்பழம், குங்குமப்பூ மற்றும் பலவற்றை இணைத்துள்ளார்.


உதய்பூரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த திக்விஜய், தனது தந்தை தங்கள் ஆட்டோமொபைல் கடையில் கடினமாக உழைப்பதைப் பார்த்து வளர்ந்தவர். 

புத்தகங்கள் மற்றும் விரிவுரைகளைத் தாண்டி வளர்ந்தவர்.


'நான் எப்போதும் புதுமையான யோசனைகள் மற்றும் அவுட் ஆஃப் தி பாக்ஸ் செய்ய வேண்டிய விஷயங்களைத் தேடுவேன். 

பள்ளியில் என் ஆசிரியர்கள் எப்போதும் என் மூளையின் இந்த புதுமையான பக்கத்தை ஆதரித்தனர்' 

என்று அவர் கூறியிருந்தார்.

நான் எனது ஓய்வு நேரத்தில் ஏதாவது செய்யத் தொடங்கினேன், பல்வேறு விஷயங்களில் நான் தடுமாறினேன். நான் கவனித்தது என்னவென்றால், நிறைய பேர் பேக்கிங் மற்றும் தின்பண்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

இது நானும் செய்யக்கூடியதாகத் தோன்றியது.

அத்தோடு நான் எப்போதும் ஒரு தீவிர சாக்லேட் பிரியர்' 

என்று தன் ஆரம்பத்தை விவரித்தார்.


'இந்த யோசனையை எனது உறவினர் மகாவீர் சிங்கிடம் பகிர்ந்து கொண்டேன், அவர் என்னுடன் இணைய ஆர்வமாக இருந்தார். ஆனால், அப்போது என்னிடம் இதுகுறித்த செயல் திட்டம் எதுவும் இல்லை. சாக்லேட் செய்வது எப்படி என்று கூட எனக்குத் தெரியாது'

என்று அவர், எப்போதும் தான் ஆர்வமுள்ள மனம் கொண்டவர் என்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை விரும்புவதாகவும் கூறினார்.


யூடியூப்பின் உதவியுடன், திக்விஜய் சாக்லேட் தயாரிக்கும் கலையைக் கற்றுக் கொண்டார்.

மேலும் அவற்றை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் விநியோகிக்கத் தொடங்கினார்.


'எனது வீட்டு சமையலறைக்கும் என் அத்தையின் சமையலறைக்கும் இடையில் நான் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன். பிழைகள் இருந்தன, ஆனால் காலப்போக்கில் சரியான சமநிலையை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. ஆரம்பத்தில் பகுதி நேர வேலையில் இருந்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்தேன்' 

என்று அவர் நினைவு கூர்ந்தார்.


2021ம் ஆண்டில், திக்விஜய் தனது முதல் 1,000 சாக்லேட் ஆர்டர்களை ஒரு கார் ஷோரூம் உரிமையாளரிடமிருந்து பெற்றார். 


அதே ஆண்டு சாரம் என்ற பெயரில் தனது பிராண்டையும் அறிமுகப்படுத்தினார். நேரத்தை கழிக்க பொழுதுபோக்காக ஆரம்பித்தது, இன்று வெற்றிகரமான சாக்லேட் பிராண்டாக மாறி, ரூ.1 கோடி வருமானம் ஈட்டி, 2 டன் சாக்லேட்டை விற்று சாதனை படைத்துள்ளார் திக்விஜய்.


2021ம் ஆண்டில், திக்விஜய் அழிந்துவரும் பல்வேறு வகையான நாட்டுப் பழங்கள் பற்றிய கட்டுரையை ஆன்லைனில் பார்த்தார். 


'நான் இதுவரை கேள்விப்படாத பழங்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தன, அதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

எங்களைப் பொறுத்தவரை, பழங்கள் என்றாலும் பெரும்பாலும் ஆப்பிள்கள், மாம்பழங்கள், வாழைப்பழங்கள் மற்றும் திராட்சைகள் தான்' என்று குறிப்பிட்டார்.

'இவ்வளவு சுவையான பழங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி கேள்விப்பட்டது வருத்தமாக இருந்தது, அதற்கு நான் ஏதாவது செய்ய விரும்பினேன். 

அப்போதுதான் சாக்லேட்டில் போட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது' 

என்கின்றார்.


கோகம்இ ஐஸ் ஆப்பிள் போன்ற உள்நாட்டில் விளையும் பழங்களை ஆராய்ந்த திக்விஜய், சாக்லேட்டுடன் எந்தெந்த பழங்கள் நன்றாகப் பொருந்துகின்றன என்பதைக் கண்டறிய முயன்றார். 


'சமையல் உலகில் நாம் கவர்ச்சியான பெர்ரி, செர்ரி மற்றும் ஆரஞ்சுகளுக்கு அப்பால் செல்ல மாட்டோம். தெரிந்த சில பழங்களைத் தாண்டி வேறு எதையும் வைத்திருக்கும் பிராண்டை நான் பார்த்ததில்லை. அதனால் அழிந்து போகும் பழங்களைச் சேர்த்த சாக்லேட்டுகளுக்கு சந்தை இருக்கிறதா என்று நான் ஆச்சரியப்பட்டேன்' 

என்று அவர் கூறுகின்றார். 


அதோடு குங்குமப்பூ, நாவல்பழம், நெல்லிக்காய், ஏலக்காய், இலந்தை போன்ற பழங்களை சாக்லேட்டில் சேர்த்துள்ளார் திக்விஜய் சிங்.



🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*


*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Pages* 

*Instagram*

*WhatsApp group*

*Twitter*