Latest news: நாளை பாடசாலை இடம் பெறுமா? பற்றிய முக்கிய அறிவித்தல்!
tamil news: வடகிழக்கில் நாளை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதாவது கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடகிழக்கு பிரதேசங்கள் தழுவிய ரீதியில் நாளையதினம்(28/07/2023) வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து நாளை பாடசாலைகள் இடம்பெறாது என ஆசிரியர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதேவேளை வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தை நோக்கி பேரணியொன்றும் நாளை இடம்பெறவுள்ளது.
மேலும் குறித்த ஹர்த்தாலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தமிழரசுக்கட்சி உள்ளிட்ட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*