முதலையை திருமணம் செய்த மேயர்... முகத்தில் முத்தம், விழாவில் நடனம் - இதெல்லாம் ஏன் தெரியுமா?
மழை, பயிர் முளைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆசீர்வாதங்களை பெறும் வகையில், பெண் முதலையுடன் மெக்சிகோ மேயர் திருமணம் செய்துகொண்ட பாரம்பரிய நிகழ்வு நடந்துள்ளது.
தெற்கு மெக்சிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரத்தின் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா, நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படும் பாரம்பரிய விழாவில் பெண் முதலையை மணந்தார். உள்ளூர் கதைகளின்படி முதலை "இளவரசி" ஆக பார்க்கப்படுகிறது.
"நாங்கள் ஒருவரையொருவர் நேசிப்பதால் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். அதுதான் முக்கியம். காதல் இல்லாமல் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இளவரசியுடன் நான் திருமணம் செய்துகொள்கிறேன்," என்று பாரம்பரிய சடங்கின் போது மேயர் சோசா கூறினார்.
Labels:
வெளிநாட்டு செய்திகள்