பல வித கட்டுபாடுகளை விதித்து டிவிட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்...!
டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, அவ்வவ்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சில சமயங்களில் பணியாளர்களுக்கும், சில சமயங்களில் ட்விட்டர் பயனாளிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்.
டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, அவ்வவ்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சில சமயங்களில் பணியாளர்களுக்கும், சில சமயங்களில் ட்விட்டர் பயனாளிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார். முதலில் வருவாயைப் பெருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ப்ளூ டிக் பெற சந்தா செலுத்தும் முறையைக் கொண்டுவந்தார். மேலும், விளம்பரத்திற்கு அப்பால் வருவாய் ஈட்ட ட்விட்டர் பிரபலங்களின் குறிப்பிட்ட பதிவுகளைப் படிக்க கட்டணம் செலுத்தும் முறை பற்றிய அறிவிப்பு இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியானது. மேலும், ட்விட்டர் API பயன்படுத்தப்படுத்தும் டெவலப்பர்களிடம் இருந்து ட்விட்டர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில், இப்போது பயனர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகள் விதித்து எலான் மஸ்க் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, சந்தா செலுத்திய அதிகாரப்பூர்வ பயனாளர்கள், அதாவது ப்ளூ டிக் பெற்ற பயனாளிகள் நாளொன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும். சந்தா செலுத்தாமல் நீண்ட நாட்களாக டிவிட்டரை பயன்படுத்துவர்கள், ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே வாசிக்கலாம். மேலும், புதிதாக டிவிட்டருக்கு நுழைபவர்கள், நாளொன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.