Latest news: பாடசாலை மாணவிக்கு நிகழ்ந்த பரிதாபம்! கோபத்தில் உறவுகள்...
Tamil news: யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வருடம் TikTok செயலி ஊடாக நுவரெலியா, சீதுவை பகுதியைச் சேர்ந்த இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாடசாலை கல்வியை கைவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்குச் சென்றுள்ளார்.
தொடர்ந்து குறித்த காதலனை திருமணம் செய்த மாணவி,
திருமணமாகி சில வாரங்களிலேயே சீதுவை இளைஞன் தனது காதல் மனைவியை பணத்துக்காக விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளார்.
அதனையடுத்து குறித்த பெண் அங்கிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், சீதுவை இளைஞன் குறித்த பெண்ணை தொடர்புகொண்டு தன்னிடம் வருமாறு மிரட்டியதுடன் இல்லையென்றால் இருவரும் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என பயமுறுத்தியுள்ளார்.
இதனால் குறித்த பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தற்சமயம் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பெற்றோர்களுடனான நெருக்கம் பிள்ளைகளிடம் குறைந்துவரும் நிலையில் தவறான வழிப்படுத்தலுக்குள் தமிழ் இளைஞர், யுவதிகள் மாட்டிக் கொள்கின்றது இனியாவது படிப்பினையாகுமா என்பது கேள்விக்குறியே???