Latest news: ஹர்த்தால் யாழ்ப்பாணம்!
tamil news: கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடகிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலும், முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணியும் இன்று வெள்ளிக்கிழமை(28/07/2023) இடம்பெற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம்பெற்று வருகின்ற போதும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுவதுடன் பொதுமக்கள் நடமாட்டம் அங்காங்கே காணப்பட்டாலும் வழமையான நிலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
மேலும் யாழ்ப்பாணம் , வடமராட்சி , தென்மராட்சி , வலிகாமம் , தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து செயற்பாடுகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*