Latest news: தாயகம் திரும்புகின்றார் சாந்தன்! அறிவித்தார் சிறீதரன்
tamil news: இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் தமிழகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை தாயகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தெரிபித்துள்ளனர் இந்திய அதிகாரிகள்.
அதாவது, இந்தியாவிலுள்ள சாந்தனை இலங்கைக்கு கூட்டிவருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சருடன் பேசியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் இலங்கை திரும்பிவருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
சென்னையிலுள்ள தூதரகத்தின் துணைத்தூதுவரான வெங்கட் அவர்களோடு பேசப்பட்டுள்ளது.
அநேகமாக 2ஃ3 நாட்களுக்குள் அழைத்துவருதல் இடம்பெறும். அதோடு இந்திய அதிகாரிகளால் சில ஆவணங்கள் கோரப்பட்ட நிலையில் அவற்றை சமர்ப்பிக்கப்படுமிடத்து விடயம் சாத்தியமாகும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக சிறீதரன் கூறியுள்ளார்.
மேலும் கல்லீரல் பாதிப்பினால் அபாய கட்டத்தில் சாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*