𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா!!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில், சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது,
மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் ரத்தனதெனிய ஹொகொல்ல எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சிறுமி 2019ம் ஆண்டில் இருந்து (11 வயதும் 10 மாதங்கள்) பெரியப்பாவினால், அச்சிறுமியின் வீட்டில் வைத்து, இரண்டு வருடங்களாக அவ்வப்போது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அச்சிறுமியின் வீட்டில் ஒருவர் திருடுவதற்கு மறைந்துள்ளார் என்று அப்பிரதேச அயலவர்கள், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது , குறித்த 15 வயதான சிறுமியுடன் காதல் உறவை கொண்டிருப்பதாகவும் அதனால் அந்த வீட்டுக்குச் சென்றதாக கூறியிருந்தார். மேலும் அச்சிறுமியை எவ்விதமான தொந்தரவுக்கும் தான் உட்படுத்த வில்லையென பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
என்றபோதும் குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அச்சிறுமி, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து இது தொடர்பில் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தன்னுடைய பெரியப்பா, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று தெரிவித்தார்.
இதனை வெளியில் சொன்னால், இரு வீட்டாருக்கும் இடையில், பிரச்சினை ஏற்படும் என்ற பயத்தால், வெளியில் சொல்லவில்லை என்று மேலும் தெரிவித்திருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் ஹொகொல்ல ரத்தனதெனிய பகுதியை சேர்ந்த ‘சமந்த” என்று அழைக்கப்படும் குறித்த பெரியப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை பிபில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக "மெதகம" பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*