𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : இலங்கை சுகாதாரத்துறைக்கு 40,000 மெற்றிக் தொன் டீசல் வழங்கிய ஜப்பான்.
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : ஜப்பான் நாடானது இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது. குறித்த நன்கொடையானது இலங்கை சுகாதார சேவையின் நோயாளர் காவு வண்டி மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரான மிசுகோஷி ஹிடேகி மற்றும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரின் முன்னிலையில் இன்று(திங்கள் 19) கொழும்பு துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மற்றும் டீசல் விநியோகத்தின் வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக, அதிகாரிகள் அதிநவீன எரிபொருள் முகாமைத்துவ தகவல் அமைப்பை (FIMS) அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேலும் சுகாதார நிறுவனங்கள் அனைத்தும் டீசல் விநியோகமும் கண்காணிக்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*