𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗰𝗶𝗻𝗲𝗺𝗮 𝗻𝗲𝘄𝘀: பெண்ணுக்கும், ஆணுக்கும் உள்ள நட்பை அழகாக காட்டிய 6 படங்கள்.. சேரனுக்கு தோள் கொடுக்கும் தோழியாக இருந்த நடிகை
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗻𝗲𝘄𝘀: என்னதான் வித்தியாசமான படங்களை பார்த்து நாம் மகிழ்ந்து வந்தாலும், நட்பு ரீதியான படங்கள் பார்க்கும்போது நம் மனதிற்கு இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை கொடுக்கும்.
அதிலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பை பார்க்கும் பொழுது இந்த மாதிரி ஒரு பிரண்ட்ஷிப் நம்ம வாழ்க்கையிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பொறாமைப்படும் அளவிற்கு சில படங்கள் வெளிவந்திருக்கிறது.
இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு '5 ஸ்டார்' திரைப்படம் வெளிவந்தது.
இதில் கனிகா, பிரசன்னா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க கல்லூரி நண்பர்களின் நட்பை வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.
அதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்புக்குள் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு திருமணம் ஆன பிறகும் நட்புடன் இருப்பதை அழகாக காட்டப்பட்டிருக்கும்.
இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 2003ம் ஆண்டு 'பிரியமான தோழி' திரைப்படம் வெளிவந்தது.
இதில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி, வினீத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் மாதவன் மற்றும் ஸ்ரீதேவி சிறு வயதிலிருந்தே நண்பர்களாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்களுடைய நட்பின் ஆழத்தை அழகாக காட்டி இருப்பார்கள்.
இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு 'பெங்களூர் டேஸ்' திரைப்படம் வெளிவந்தது.
இதில் நிவின் பாலி, துல்கர் சல்மான், பகத் பாசில்,நஸ்ரியா, பார்வதி திருவோடு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு செல்லும் மூன்று நண்பர்களை சுற்றி எடுக்கப்பட்டிருக்கும்.
கே. ஷாஜகான் இயக்கத்தில் 2002ம் ஆண்டு 'புன்னகை தேசம்' திரைப்படம் வெளிவந்தது.
இதில் தருண், சினேகா, குணால், தாமு மற்றும் ப்ரீத்தி விஜயகுமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதையானது நல்ல நண்பர்கள் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து காட்டலாம் என்று சொல்லும் விதமாக இருக்கும். அத்துடன் நண்பர்கள் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டிய படமாகும்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் 2016ம் ஆண்டு 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் வெளிவந்தது.
இதில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் மடோனா வேலை இல்லாமல், நண்பர்களும் இல்லாமல் தனியாக தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு நண்பராக இருந்து அவருடைய வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு வழிகாட்டியாக அனைத்தையும் செய்து முடித்து கூடவே பக்கபலமாக இருப்பார்.
சேரன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு 'ஆட்டோகிராப்' திரைப்படம் வெளிவந்தது.
இதில் சேரன், கோபிகா, சினேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை ஆனது காதல் தோல்வியால் வாழ்க்கையை இருட்டில் ஓட்டிக் கொண்டிருக்கும் சேரனுக்கு தோள் கொடுக்கும் தோழியாக சினேகா அவருடைய நட்பின் ஆழத்தை காட்டி இருப்பார்.
அதே நேரத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள நம்மிடம் உண்மையான நண்பர்கள் இருந்தால் போதும் என்று உணர்த்தும் படமாக வெளிவந்திருக்கும்..
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
சினிமா