𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு அவர் வேண்டாம் என்று அடம்பிடித்த AVM நிறுவனத்தினர்..!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : பிடிவாதமாக பிடித்த ஆர்.சுந்தர்ராஜன்!
இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அவர்களது வாழ்வில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது அந்த சம்பவத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அவர் இயக்கிய நான் பாடும் பாடல் மிகப்பெரிய வெற்றிகரமான படமாக ஓடிக் கொண்டிருந்தது...
அப்பொழுது பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் சுந்தர்ராஜன் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொன்னார்.
"எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கிக் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்." என சொல்லி விட்டார்.
உடனடியாக ஏவிஎம் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது.
அட்வான்ஸாக இரண்டு லட்ச ரூபாய் பணமும் வந்தது.
அடுத்த படத்திற்கு கதையே இன்னும் தயாராகவில்லையே எப்படி அட்வான்ஸ் வாங்குவது என முழித்துக் கொண்டு இருந்தார் ஆர் சுந்தர்ராஜன்.
"அதைப்பற்றி பரவாயில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்.இதை வாங்கிக் கொள்ளுங்கள்." என AVM தயாரிப்பாளர் சொல்ல, அந்தப் பணத்தை வாங்கி புது வீடு வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ஆர் சுந்தரராஜன்.
சில நாட்களிலேயே அற்புதமான கதை ஒன்று தயாராகி இருந்தது. அதுதான் 'வைதேகி காத்திருந்தாள்'. ஏ.வி.எம்.முக்கு போய் கதையைச் சொன்னார் சுந்தரராஜன்.
"நல்லா இருக்கு. ஹீரோ யார் ?" என்று ஏவிஎம் கேட்க அதற்கு ஆர் சுந்தர்ராஜன் விஜயகாந்தை போட்டால் பொருத்தமாக இருக்கும்.
படமும் பிரமாத வெற்றி பெறும்' என்றார் சுந்தரராஜன்.
"விஜயகாந்தா ? வேண்டாம் வேண்டாம். ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற 'நான் பாடும் பாடல்' படத்தில் சிவகுமார்தானே ஹீரோ ? வைதேகி காத்திருந்தாள் படத்திலும் அவரையே நடிக்க வையுங்கள்" என்றாராம் அவர்.
ஆர் சுந்தரராஜன் உறுதியாகச் இருக்கிறார்"அந்த வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த்தான் பொருத்தமாக இருப்பார்." பொறுமையாக அதைக் கேட்ட ஏ.வி.எம். : "இல்லை. விஜயகாந்தை ஹீரோவாக போடுவதில் எங்களுக்கு சம்மதம் இல்லை.
அப்படியானால் நாங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்து விடுங்கள்." என்கிறார் ஏ.வி.எம். ஆர் சுந்தரராஜன் திகைத்துப் போனார்.
ஏனெனில் ஏவிஎம் கொடுத்த அந்த பணத்தை வாங்கித்தான் புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகையாகக் கொடுத்து விட்டிருந்தார் .
வேறு பணம் எதுவும் அவர் கைவசம் இல்லை.
என்ன செய்யலாம் என திகைத்து பொய் தடுமாறினார் ஆர் சுந்தரராஜன். ஏவிஎம் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படி அவர்களுக்கு திருப்பி கொடுப்பது என அன்று மாலை வாடிய முகத்தோடு வழக்கமான வாக்கிங் சென்றபோது எதிரே வந்தார் தூயவன் என்ற கதாசிரியர்.
என்ன நடந்தது என்று உண்மையான அக்கறையோடு தூயவன் விசாரிக்க, உன் வைதேகி காத்திருந்தாள் என்ற படத்திற்கு விஜயகாந்த் ஹீரோவாக போட வேண்டும் நான் என்று சொன்னேன் ஆனால் ஏவியம் அதை ஒப்புக்கொள்ளவில்லை அதனால் கொடுத்த அட்வான்ஸ் இரண்டு லட்ச ரூபாய் திருப்பிக் கேட்கிறார் என தூயவரிடம் சொல்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்.
"இவ்வளவுதானே? இதற்குப் போய் ஏன் இப்படிக் கவலைப்படுகிறீர்கள்? வாருங்கள் என்னுடன்.
" அடுத்த சில நிமிடங்களில் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டில் அமர்ந்து இருந்தார்கள்.'வைதேகி காத்திருந்தாள்' கதையை அவர்களிடம் ஆர் சுந்தரராஜன் சொல்ல...உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் ஆர் சுந்தரராஜன் கைகளில் கொடுக்கப்பட,அதை வாங்கி ஏவி எம்மிடம் கொடுத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆர் சுந்தரராஜன்.
தூயவன் 'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் தயாரிப்பாளர் ஆனார். விஜயகாந்தின் நடிப்பில் வைதேகி காத்திருந்தாள் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
சினிமா