𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : இ. போ. ச பேருந்து நாவற்குழியில் விபத்தானது!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று புதன் மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின்
குறித்த பேருந்து,
பயணிகளை ஏற்றி வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த போது முன்னே பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபதுக்குள்ளானது.
குறித்த மோட்டார் சைக்கிள் சாரதி நாவற்குழியில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியிலே விபத்துக்குள்ளானர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுடன், பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மேலதிக விசாரணைகளை நாவற்குழி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றும் சமீப காலமாக அரச பேருந்துகளே அதிகம் விபத்துக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிட்டதக்கது...
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்