𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀: மக்களின் பௌர்ணமி பொங்கலை தடுத்து நிறுத்திய பொலிஸார்!!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀: இன்று வெள்ளி(23.02.2024) தென்னைமரவாடி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் மற்றும் அன்னதான நிகழ்வினை எவ்வித காரணமும் இன்றி புல்மோட்டை காவல்த்துறையினர் தடுத்து நிறுத்தித்தியுள்ளனர்.
தென்னமரவாடி கிராம மக்களால் நடாத்தப்படும் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் விழாவானது வழமை போன்று இன்றைய தினமும்(வெள்ளி) ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இப் பொங்கல் விழாவிற்கு தென்னமரவாடி கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்களும் மற்றும் சிவில் அமைப்புகளும் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தனர்.
அதற்கமையை இக்கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த 200க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர், புலணாய்வாளர்கள் போன்ற பெரும் படையோடு போராட்டங்களை தடுக்கும் ஆயுதங்களுடன் வருகை தந்து அப்பிரதேசத்திலிருந்த கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும், பொங்கலையும் காரணமின்றி தடுத்தனர்.
இதனால் குறித்த மக்களின் வழிபாடு தடைப்பட்டுள்ளது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*