வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட டயனா கமகே!!


𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : நாட்டின் பொருளாதரத்தை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாற்றுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என இலங்கை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.


நேற்று(22.02.2024) ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இவ்வாறு தெரிவித்தார்.


அதாவது சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்க கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென  குறிப்பிட்டுள்ளார்.



மேலும் இரவு நேர பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாக சுட்டிக்காட்டினார்.


மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, நம் நாட்டு மக்களும் இரவு நேரங்களில் உணவகங்களுக்குச் செல்வது மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்வது போன்றவற்றில் ஈடு படுவதை விரும்புகின்றனர்.


இதன்மூலம் விசேடமாக மதுவரி வருமானத்தையும் அதிகரிக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கிறது.


ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும், நாட்டின் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும், அரச வருமானத்தை அதிகரிப்பது அவசியமானதாகும்.


மேலும் குறித்த இரவு நேரப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.


ஆனால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் இருப்பது அவசியம்.


குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும், கொழும்பு போன்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.



ஆகையால் இதுபோன்ற இடங்கள் தொடர்பான சட்ட, விதிமுறைகளை திருத்தம் செய்து, தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று குறிப்பிட்டார் . 


சுற்றுலாபயணிகள் நாட்டிற்கு வந்து பொழுது போக்கக்கூடிய வகையில் நாடு காணப்பட வேண்டும் ஆகையால் தற்போதுள்ள சில கட்டுப்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றார்.


அதாவது  உணவகங்கள் திறக்கும் மற்றும் பூட்டும் நேரத்தை மாற்ற வேண்டும்.


சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான ஒரு நெகிழ்வான கொள்கைக்கு நாம் செல்ல வேண்டும்.” என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*