𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு!! யாழ் வரவுள்ள ஜனாதிபதி.
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 28 மற்றும் 29ம் திகதிகளில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சுகளின் செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நடைபெறவுள்ள குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்து யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்க்காக நடமாடும் சேவை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒருங்கிணைப்பு கூட்டத்தின் பின்பு காணிப்பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*