𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ் மொழி கட்டாயம்!!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : இலங்கை காவல்துறையினருக்கு தமிழ்மொழி கட்டாயம்..!
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என யாழ் பிரதிப் காவல்துறை மாஅதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்துவதற்க்கும் மற்றும் போதைப் பொருள் விற்பனையினை தடுப்பதற்காகவும் காவல்துறையினருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் யாழ்ப்பாண தலைமைக் காவல் நிலையத்துக்கு இன்று(17.02.2024) முற்பகல் வருகையினை மேற்கொண்ட யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் காவல்துறை மாஅதிபர் காளிங்க ஜெயசிங்க இந்தக் கட்டளைகளை வழங்கியிருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்றும் மற்றும் யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனையை ஒழிப்பதற்க்கு காவல்துறையினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று குறித்த அதிகாரிகளுக்கு, ஆலோசனைகளை பிரதிப் காவல்துறை மாஅதிபர் காளிங்க ஜெயசிங்க வழங்கியிருந்தார்..
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*