வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : எரிபொருள் விலை குறைய வாய்ப்பு!

 


𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : கடினமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாடு படிப்படியாக மீண்டு வரும் சூழ்நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். ஒரு காலத்தில் நாம் அனைவரும் எரிபொருள் வரிசையில் நின்றோம். அனைவரின் அர்ப்பணிப்புடன், நிலையான எரிபொருள் விநியோகத்தை பேண முடிந்துள்ளது.

ஐரோப்பாவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், எரிபொருள் பயன்பாடு அதிகமாக உள்ளதால் டிசம்பரில் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை, உலகில் எரிபொருள் விலை உயர்வு என்பது இயல்பான ஒன்று என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக தெரிவித்தார்.

இதேவேளை குளிர்காலம் முடிவடையும் நிலையில், மார்ச் மாதத்துக்குப் பிறகு எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக  தெரிவித்தார்.


இன்றைய நிலவரப்படி, ஓட்டோ டீசல் மெட்ரிக் தொன் 130,791, பெட்ரோல் 92 ஒக்டென் மெட்ரிக் தொன் 83,275, சூப்பர் டீசல் மெட்ரிக் தொன் 8313, பெட்ரோல் 95 ஒக்டென் மெட்ரிக் தொன் 11,196,  விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் JET A1 மெட்ரிக் தொன் 17,274 மற்றும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் (FO) 75,410 மெட்ரிக் தொன் என்ற விதத்தில் (FO) பேணப்படுகிறது.

அண்மைக்கால வரலாற்றில் தற்போது மிகப்பெரிய அளவிலான எரிபொருள் கையிருப்பு வைத்திருக்கிறோம். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் டொலர்களின் சேமிப்பையும் எம்மால் பேண முடிந்துள்ளது.

வலுசக்தித் தேவைக்காக, 200 மில்லியன் டொலர்கள் மேலதிக கையிருப்பு மற்றும் ஒரு வாரத்திற்கு அவசியமான டொலர்களை அதே வாரத்தில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், டெண்டர் நடைமுறையின்படி, அடுத்த 06 மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

மேலும், 02 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் செயற்பாடுகளை (bunkering system) பொறிமுறை தொடங்கப்பட்டது.

இதன் மூலம் மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் (FO) 5,200 மெற்றிக் தொன்களை கப்பல்களுக்கு விற்பனை செய்வதற்கும் 03 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடிந்துள்ளது.

மேலும், கப்பல்களுக்கு டீசல் நிரப்பும் பணி மிகக் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்படும்” என இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக மேலும் தெரிவித்தார்.


 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*


*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...


Check out நரன் Media network


*Facebook Page*


https://www.facebook.com/Naranmedianet?mibextid=2JQ9oc


*Instagram*


https://instagram.com/naran_media?igshid=MzNlNGNkZWQ4Mg==


*WhatsApp group*


https://chat.whatsapp.com/LV2RS6UYpqiLJN1BOmOY2B


*Twitter* 


https://twitter.com/NaranMedia