𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு!! ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை.
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : ஜீவன் தொண்டமான் அடுத்த கட்ட நடவடிக்கையாக தோட்ட தொழிலார்களின் சம்பள உயர்வு காணப்படுகிறது.
அதன் முதற்கட்டமாக தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று(28.02.2024) புதன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் நடைபெற்றுள்ளது.
மேலும் குறித்த சந்திப்பில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள நிர்ணய சபையில் கோரிக்கை ஒன்றிணை சமர்ப்பித்தல் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், தேயிலை உற்பத்தி சம்பள சபையின் அங்கத்தவர் மற்றும் சட்டத்தரணியுமான "கா.மாரிமுத்து", இறப்பர் பயிரிடல் பதனிடல் சம்பள சபைக்கான அங்கத்தவர் மற்றும் உபதலைவருமான "எஸ்.இராஜமணி" ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகச் செயலாளர் "எஸ்.பி விஜயகுமார்", சிறிலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் சார்பில் "பி.ஜி சந்திரசேன", செங்கோடி சங்கத்தின் சார்பில் திருமதி."வி.ராஜலக்சுமி", சிறிலங்கா பொதுஜன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் "சிறிமான ஹெட்டிகே சாந்த" மற்றும் ஜே.எஸ்.எஸ் சங்கத்தின் சார்பில் "ஜே.ஏ.டி நிஸாந்த புஸ்பகுமார" ஆகியோரும் குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பின் மூலம் தோட்ட தொழிலார்களின் சம்பள பிரச்சினைக்கு சாதகமான முடிவு ஒன்று கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*