𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : ஹரிஹரனிடம் மன்னிப்பு கோரும் யாழ்ப்பாண ரசிகர்கள்!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀: யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி குறித்து ஹரிஹரன் தமது கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் மற்றும் பிரபல நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோகி பாபு, சாண்டி, கலா மாஸ்டர், ரம்பா, போன்ற பிரபலங்களுடன் நேற்று முன் தினம் யாழ்ப்பனத்தில் முற்றவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக ஸ்டார் நைட் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் வி.ஐ.பிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றும் என்ட்ரி இலவசம் என்பதால் இந்த விழாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்திருந்தார்கள்.
வி.ஐ.பிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்வையாளர்கள் செல்ல முயன்று இருக்கிறார்கள். இதனால் அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றதால் ரசிகர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருந்தது .
இதனால் ஒரு சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது .
ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தமுடியாமல் குறிப்பாக 20 நிமிடம் தடைப்பட்டு இருந்தது.
இது தொடர்பில் ட்விட்டர் பதிவு ஒன்றிணை ஹரிஹரன் பதிவிட்டுள்ளார். அதாவது ‘மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைத்த யாழ்ப்பாணத்து மக்களுக்கு நன்றி, உங்கள் அன்பும் ஆதரவும் இசையின் வலிமையை காட்டி இருக்கிறது,,நாம் ஒன்றாக இந்த உறவை கொண்டாடுவோம். இந்த விழாவை ஒருங்கிணைத்த கலா மாஸ்ட்ருக்கும் இந்திரகுமாருக்கும் நன்றி. ஒவ்வொரு நொடியும் சிறப்பாக இருந்தது.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்தார்..
மற்றும் ஹரிஹரனின் இந்த பதிவிற்கு பல யாழ்ப்பாணத்து ரசிகர்கள் நிகழ்ச்சியில் நடந்த சில சங்கடங்களுக்கும், சிரமத்துக்கும் மன்னிப்பு கோரி வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .
ஏற்கனவே இந்த விழா குறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ‘நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் சரியாகத்தான் செய்திருந்தோம். ஆனால் 35 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு மேல் வந்துவிட்டார்கள் இதனாலயே சிரமம் ஏற்பட்டது .
மேலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளே நுழைந்த பிறகு தான் பிரச்சனை ஏற்பட்டது இதனால் 20 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி தடைபட்டது அதன் பின்னர் நிகழ்ச்சி நன்றாக தான் சென்றது.
மற்றும் அவர்கள் தெரிவிக்கையில் நிகழ்ச்சி பாதியில் நின்றது என்பது முற்றிலும் தவறான தகவல் ஆகும் என்று கூறியுள்ளனர்.
 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
https://www.facebook.com/Naranmedianet?mibextid=2JQ9oc
*Instagram*
https://instagram.com/naran_media?igshid=MzNlNGNkZWQ4Mg==
*WhatsApp group*
https://chat.whatsapp.com/LV2RS6UYpqiLJN1BOmOY2B
*Twitter*
https://twitter.com/NaranMedia