𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗻𝗲𝘄𝘀: பாலத்துக்குள் விழுந்த கனரக வாகனம்!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗻𝗲𝘄𝘀:
எம்பிலிபிட்டிய - மித்தெனிய வீதியில் ஹுலந்த ஓயாவின் குறுக்கே கும்புகொடர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலமே இடிந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இன்று (05) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் மரக்கட்டை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் (லொரி ) பாலத்தை கடக்கும் பொழுது விபத்துக்குள்ளாகியு ள்ளது.
இதனால் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்ற நிலையில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளதோடு பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்போது வாகன சாரதிக்கும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த நிலையில் பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியத்த , தங்காலை நோக்கிக் செல்லும் வாகனங்களுக்குக் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் பாலம் 1985ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது முறையான பராமரிப்பின்றி வீதியின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டமையினால் இடிந்து விழுந்துள்ளது என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*