வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : கல்வி முறைமையில் வரவுள்ள மாற்றம்!!


𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 :  தரம் 6 க்கு மேல் உள்ள மாணவர்களுக்கு பாடசாலையில் கல்வி கற்க கூடிய பாடங்களின் எண்ணிக்கையை இனி வரும் காலத்தில் 07 பாடங்களாக குறைப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி "சுசில் பிரேமஜயந்த" தெரிவித்துள்ளார்.


வராப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  உரையாற்றிய  கல்வி அமைச்சர் கலாநிதி "சுசில் பிரேமஜயந்த" இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் மாணவர்கள் வாழும்  மாகாணங்களுக்கு ஏற்ப அவர்களது பூர்வீக கைத்தொழில்களை இணைத்து எஞ்சிய 03 பாடங்களையும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


மற்றும் , பாடசாலைகளுக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான (IT) அறிவை பெற்றிருக்க வேண்டும் என்றும், 

அனைத்து வலயத்திலும் அமைக்கப்பட்டுள்ள கணினி  மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பாரிய வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  கூறியுள்ளார்.


மேலும் ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்குவதை தொடர்ந்து, அவர்களுக்கு மென்பொருள் உருவாக்கம் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக பிராந்திய மட்டத்தில் குழுவொன்றைத் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் (A/L) தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தொழில்சார் பாடத்தை இலவசமாகக் கற்கும் வாய்ப்பை மார்ச் 5ம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


அவர்களுக்கு நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சர் "சுசில் பிரேமஜயந்த" குறிப்பிட்டார்.



இது குறித்து, பாடசாலை அதிபரின் ஆலோசனையினை பெற்று திறன் மேம்பாட்டு அலுவலர்களின் வழிகாட்டுதலின் கீழ்,  பாடசாலை நேரத்துக்குப் பின், அருகில் உள்ள மத்திய நிலையங்களுக்கு சென்று இரண்டரை மணி நேரம் நடக்கும் பயிற்சியில் சேரலாம் என்று , கல்வி அமைச்சர் கலாநிதி "சுசில் பிரேமஜயந்த"  தெரிவித்திருந்தார் .


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*