𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : விவசாயிகளுக்கு இலவச காப்பீடு !
ஏற்கனவே ஆறு வகையான பயிர்களுக்கு அதாவது நெல், மிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம் மற்றும் சோயா ஆகிய பயிர்களுக்கு
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இலவச விவசாய காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இலவச காப்பீடானது காட்டு யானைகளினால், வறட்சியினால், மற்றும் கனமழை காரணமாக ஏற்படும் சேதங்களுக்காகவே இந்த காப்புறுதி வழங்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கூறிய காரணிகளால் பயிர் சேதம் ஏற்பட்டால் குறித்த விவசாயிகளுக்கு இலவச காப்பீடு வழங்கும் வகையில், பயிர்க் காப்பீட்டுப் பயிர்களில் சின்ன வெங்காயச் செய்கையையும் சேர்த்துக் கொள்ளுமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*