Latest news: மனைவிக்கான மருந்துக்கு பணம் இல்லை! சுதந்திர தினத்தில் அந்தோ பரிதாபம்!
tamil news: மனைவியின் நோய்க்கான மருத்துவத்திற்கு போதிய பணவசதி இல்லாததால் கணவன் மனைவிக்கு விசம் கொடுத்துவிட்டு தானும் விசத்தினை அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மிக நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்ட, அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால்(வயது 58) அதிகளவில் பணம் செலவிட வேண்டியிருந்துள்ளது.
இந்நிலையில் தனது மனைவியின் வைத்திய செலவுக்கு தேவையான பணம் இல்லாததால் இலங்கையின் சுதந்திர தினத்தன்று(04.02.2024) மாலை 4.30 மணியளவில் கணவன் மனைவிக்கு விசம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இவ்வாறாக விசம் அருந்தி ஆபத்தான நிலையிலிருந்த கணவன் மனைவியை அயலவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் நீண்டகாலமாக நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் பொருளாதார சூழல் இல்லாது தம்பதியினர் கடும் விரக்தியில் இருந்ததாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் சூரியவெவ காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*