𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : போதைப்பொருளுக்கு தாயார் பணம் கொடுக்காததால் இளைஞன் உயிரிழப்பு!!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : யாழில் நேற்று இரு இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்துள்ளனர்.
30 வயதுடைய இளைஞர் ஒருவரும் மற்றும் 26 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கபடுகிறது.
30 வயதுடைய குறித்த நபர் போதைப்பொருள் வாங்குவதற்காக தனது தாயாரிடம் பணம் கேட்டுள்ளார், தாயார் பணம் கொடுக்காததால் தனது உயிரை மாய்துள்ளார்.
குறித்த இளைஞன் போதைப்பொருள், போதை மாத்திரைகளுக்கு அடிமையானவர் என்றும், மேலும் போதைப்பொருள் தொடர்பான குற்ற செயல்களுக்காக சிறைச்சாலைக்கும் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த இளைஞன் மல்லாகத்தில் வசிப்பவர் எனறும், சிறைச்சாலையில் இருந்து அண்மையில் தான் விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது...
தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய குறித்த இளைஞன் தனது நண்பருடன் ஹரோயின் போதைப்பொருள் பாவித்த பின்னர், நண்பருக்கு தெரியாமல் சென்று ஐஸ் போதைப்பொருளும் பாவித்துள்ளார்.
அதிக போதைப்பொருள் பாவணையால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தனது வீட்டுக்கு அருகில் நடத்துள்ளது.
மற்றும் குறித்த இளைஞன் தாயாருக்கு அழைப்பினை ஏற்படுத்தி ஆபத்தில் இருப்பதை கூறியுள்ளார்.
தாயார் குறித்த இடத்துக்கு சென்ற போதும் இளைஞன் காப்பாற்ற முடியவில்லை.
மேலும் போதைப்பொருள் பாவனையை குறைப்பதற்காக நேற்று விசேட ஆலோசனையினை பிரதிப் காவல்துறை மாஅதிபர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*