𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : ஆசிரியர் கைது! மூன்று மாணவிகள் மீது தவறாக நடக்க முயற்ச்சி
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை தவறான முறைக்குட்படுத்த முயற்சித்த ஆசிரியர் கைது.
குறித்த சம்பவமானது ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவிகள் மூவரினை தவறான முறைக்குட்படுத்த முயற்சித்த அதே பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக பணிபுரியும் குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பாடசாலையில் ஐந்து (5) வருடங்களாக விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் பாடசாலையில் (10) பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளை தவறான முறைக்குட்படுத்த முயற்சித்ததாகவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.,
அந்த செய்திகளுக்கு மாணவிகள் பதில் ஏதும் அளிக்காததால், குறித்த நபர் வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்ட மாணவிகள் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையா வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன கமகேவின் தலைமையில் 44 வயதுடைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*