Laest news: அதிகரிக்கிறது பேரூந்துக்கட்டணம்!
tamil news: எரிபொருள் விலை அதிகரிப்பினால் பேரூந்துக்கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனியார் பேரூந்து சங்கம் சார்பில் அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு. அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
அதாவது, முன்னதாக 1 லிட்டர் டீசலின் விலை 29 ரூபாவினால் உயர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையின் நேற்று(30.01.2024) மீண்டும் 5 ரூபாவினால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேரூந்துக்கட்டணம் அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
'இன்னும் 2 வாரங்களிற்குள் பேரூந்துக்கட்டணத்தை நிச்சயம் அதிகரிப்போம்.
இதன்போது குறைந்தபட்ச கட்டணம் 35 ரூபாயாக இருக்க இதனை கட்டாயப்படுத்தி செய்வோம்.'
எனினும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இப்போதைக்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் ஏயுவு தாக்கம் மற்றும் எரிபொருள் கட்டண அதிகரிப்பு காரணமாக கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் திரு.ஏ.எச்.ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலும் நாங்கள் கட்டணங்களை அதிகரிக்க மாட்டோமென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் திரு.லலித் தர்மசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*