Latest news: ஈழத்தில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! நடந்தது என்ன?
tamil news: மன்னார் மாவட்டத்திலுள்ள தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி நேற்று(15.02.2024) இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தலைமன்னார் கிராமத்தில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றின் பின்புறப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் குறித்த தோட்டத்தில் வேலை செய்யும் 48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை தலைமன்னார் காவல்துறை இன்று(16.02.2024) காலை கைதுசெய்துள்ளனர் என தெரியவருகின்றது.
அந்தவகையில் குறித்த 10 வயது சிறுமி நேற்றிரவு 7 மணியளவில் அப்பகுதியிலுள்ள தனது அம்மம்மா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அம்மம்மா வீட்டில் கேட்ட போது இங்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோரால் தலைமன்னார் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரவு முழுவதும் தேடிய நிலையில் இன்று காலை சிறுமியின் உடல் குறித்த தனியார் தென்னந் தோப்பின் பின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுமி சென்ற வீதியில் பொருத்தப்பட்ட ஊஊவுஏ கமராவில் குறித்த சிறுமியை நபர் ஒருவர் தூக்கிசெல்வது பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில் குறித்த தென்னந் தோட்டத்தில் வேலை செய்யும் 48 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் தலைமன்னார் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் போதைவஸ்து பாவனைக்கு அடிமையானதன் காரணமாக அவரது மனைவி சில தினங்களுக்கு முன் இவரை பிரிந்து சென்றுள்ளதாகவும், குறித்த சந்தேகநபர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
நீதவான் பார்வையிடுவதற்காக உடல் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*