வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: ரோஜா தினத்தில் சுருண்டுவிழுந்த 2 பேர்! காதலி வந்து சென்றதும் சம்பவம்...


tamil news: ஆட்டுப்பட்டி தெரு காவற்துறை நிலையத்தின் சிறையில் இருந்த சந்தேகநபர்கள் இருவர், இனந்தெரியாத ஒருவர் வழங்கிய பாலினை அருந்தி சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பைக்கற்றில் விஷம் கலந்திருக்கலாம் என காவற்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தின் போது சந்தேக நபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்ததுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.


தொடர்ந்து விசாரணையின் பின்னர், தம்பனை பகுதியில் வைத்து தப்பியோடிய துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதுடன், பின்னர் அவர் ஆட்டுப்பட்டி தெரு கால்துறை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


இவ்வாறான பின்னணியில், துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் காதலி காதலர் வாரத்தின் ரோஜா தினமான நேற்றுக்காலை(07.02.2024) ஆட்டுப்பட்டி தெரு காவல்துறைக்கு வந்து சுகம் விசாரித்ததுள்ளார்.


தொடர்ந்து குறித்த நபர், சந்தேக நபர்களிடம் 2 மீன் பாணையும், பால் பைக்கற்றினையும்; கொடுத்துவிட்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். அதன்பின், சந்தேக நபர்கள் இருவரும் மீன் பாண்களை சாப்பிட்டுள்ளனர்.


குறித்த பால் பைக்கற்றினை குடித்தவுடன் அவர் சுருண்டு விழுந்ததுடன், மற்றைய சந்தேக நபரும் எடுத்து குடித்த நிலையில் மயக்கமடைந்த சந்தேக நபர்கள் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் குறித்த பால் பைக்கற்றில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


மேலும் பால் பைக்கற்றை கொடுத்த நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*