வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: இலங்கையில் 40,000 போலி மருத்துவர்கள்! GMOA எச்சரிக்கை


tamil news: இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு பலர் மருத்துவர்கள் போன்று வேடமிட்டு திரிவதாக வெளியான செய்திகள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) கவலை வெளியிட்டுள்ளது.


அதாவது, அறிக்கையொன்றில் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட நபர்கள் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் இதய நோய்கள் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதாக கூறி மருத்துவர்களாகக் காட்டிக்கொள்கின்றனர் எனவும்,


சுகாதாரத் துறையின் பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்களாகக் காட்டிக் கொள்வதுடன், மருந்துகளை பரிந்துரைப்பதும் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய GMOA, 

இவ்வாறான செயற்பாடுகள் நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்துள்ளது.


இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண சிபாரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுகாதார அமைச்சு இது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கத் தவறியமை வருத்தமளிப்பதாக GMOA தெரிவித்துள்ளது.


மேலும் போலி வைத்தியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு சுகாதார அமைச்சுக்கு அழைப்பு விடுத்துள்ள GMOA, இந்த நோக்கத்திற்காக தனது முழு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*