வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: 7 வருடங்களாக நீதி கிடைக்கவில்லை! காணாமலாக்கப்பட்ட தமிழ் குடும்பங்கள் பேரணி.


tamil news: கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் தமிழ் குடும்பத்தினர், பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்களின் இருப்பிடத்தை கோரி, கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியாக வீதியோரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று(21.02.2024) காலை கிளிநொச்சி வழியாக குடும்பங்கள் ஒன்றுதிரண்டு கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலை அடைந்தனர்.


முதல் போராட்டம் பெப்ரவரி 2017 இல் தொடங்கிய நிலையில்,

இன்றைய தினம் அவர்கள் நகரத்தின் ஊடாக ஊர்வலமாகச் சென்றபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி தங்கள் உறவுகளின் புகைப்படங்களை வைத்திருந்தனர்.


அவர்களில் பெரும்பாலானோர் சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினரால் அல்லது அரசாங்கத்தின் துணை இராணுவப் படைகளால் வலுக்கட்டாயமாக காணாமல் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


'எங்கே? எங்கே? எங்கே நம் உறவினர்கள்?' இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் கோஷமிட்டனர்.


இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது காணாமலாக்கப்பட்டோர் சம்மேளனத்தின் வடகிழக்கு உறவுகளின் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா,

"இன்று போராட்டம் 2,557 நாட்களைக் தாண்டுகின்றது. நாங்கள் முதலில் 2017 பெப்ரவரியில் கிளிநொச்சியில் கந்தசுவாமிக்கு வெளியே எங்கள் போராட்டத்தை ஆரம்பித்தோம்.

 

இது மற்ற மாவட்டங்களிலிலும் போராட்டங்களை ஊக்குவித்த நிலையில் இந்தப் போராட்டத்தின் தொடக்கத்தில், இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட எங்கள் உறவினர்களின் கதி என்ன என்பதை அறியவும், இதற்கு நியாயம் கேட்கவும் நாங்கள் கோரியிருந்தோம்."

"100 நாள் போராட்டத்தின் பின்னர் நாங்கள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தோம். ஆனால், இந்தக் கூட்டத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து நடந்த 2 கூட்டங்களிலோ எதுவும் வரவில்லை. மீண்டும் மீண்டும் தமிழர்கள் அரசால் வஞ்சிக்கப்படுகின்றார்கள். இலங்கையினால் நாம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சமூகத்திடம் நீதியையும் பொறுப்புக்கூறலையும் கோர தீர்மானித்தோம்.

குடும்பங்களுக்கு உண்மையையும் நீதியையும் வழங்குவதாக சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்த போதிலும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது.

2022ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில்லை. விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் ஆயுத மோதல் இரத்தக்களரி முடிவுக்கு வந்ததிலிருந்து நீதி கோரி வரும் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளாமல் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை நிறுவியுள்ளனர்.

புதிய ஆணைக்குழுவானது ஆயுதப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்யும் என்று விக்கிரமசிங்க கூறினாலும்இ காணாமல் போனோர் மற்றும் பாதிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்களின் தமிழ் குடும்பங்கள் இதில் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்."

என குறிப்பிட்டார்.


மேலும் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் 2017ம் ஆண்டு நீதிக்கான போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து, சுமார் 160 இற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகள் பற்றிய உண்மையை அறியாமல் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*