Latest news: உடலை கட்டழகாக்க நாணயங்களை விழுங்கிய இளைஞன்!
tamil news: கட்டழகுக்காக இளம் வயதினர் மத்தியில் வழக்கமான உணவூட்டத்துக்கு அப்பாலும் சத்து மாத்திரைகள், பவுடர்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும் பழக்கம் அதிகம் காணப்படுகின்றது.
புரோட்டின் பவுடர் அவற்றில் முதலிடம் வகிக்கிறது.
இது தவிரவும் உடற்பயிற்சி செய்பவர்கள் இதர ஊட்டங்களுக்காக, மருத்துவர் ஆலோசனையின்றி தாமாக எதையேனும் உட்கொள்ளும் போக்கும் அதிகம் நிலவுகின்றது.
இவ்வாறாக இந்தியாவில் புதுடெல்லியில் பாடி பில்டராக விரும்பிய 26 வயது இளைஞர் ஒருவர் துத்தநாகம் சத்துக்காக விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
கட்டழகு தேகத்துக்காக ஆசைப்பட்ட அந்த இளைஞருக்கு அது கைகூடவில்லை.
யாரோ ஒருவர் கூறியதன் அடிப்படையில் துத்தநாகம் சத்துக்குறைவினால் தனது உடல் தேறவில்லை என அந்த இளைஞர் முடிவுக்கு வந்துள்ளார்.
உடனடியாக களத்தில் இறங்கிய குறித்த இளைஞன் அதிரடியாக, நாணயத்தில் துத்தநாகத்தின் சேர்க்கை இருப்பதாக அறிந்து அவற்றை ஒவ்வொன்றாக விழுங்க ஆரம்பித்திருக்கின்றார்.
இவ்வாறு 1ரூ, 2ரூ மற்றும் 5ரூ என ரூபாய் நாணயங்களை சத்து மாத்திரை போல விழுங்கியிருக்கின்றார்.
இதனை தனது வீட்டாரிடமும் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் விளையாட்டாக அதனை கடந்திருக்கின்றனர்.
ஆனால் சில தினங்களில் வயிற்று வலி, வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் புது டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்து போய் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள்.
அங்கே வயிற்றை திறந்து பார்த்த மருத்துவர்களுக்கு 39 காசுகள் மற்றும் 37 காந்தங்கள் குடலில் ஆங்காங்கே அடைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து 7 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்த பிறகே இளைஞரின் உயிருக்கு உத்திரவாதம் கிடைத்துள்ளது.
துத்தநாகம் சத்துக்காக நாணயங்களை விழுங்கியதாக இளைஞர் தெரிவித்ததை அவரது வீட்டார் அலட்சியப்படுத்தியதேஇ இந்தளவுக்கு இட்டுச் சென்றிருக்கின்றது.
இதில் கூடுதலாக துண்டு காந்தங்களை அவர் விழுங்கியது எவர் கவனத்துக்கும் வரவே இல்லை.
மேலும் பாடி பில்டராகும் ஏக்கத்தில் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்த மருத்துவர்கள், அதற்கான கவுன்சலிங் மற்றும் சிகிச்சைக்கும் பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*