Latest news: ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம். காவல்துறையின் திருவிளையாடல் தான் காரணமா?
tamil news: யாழ்ப்பாணத்தில் முற்றவெளி பகுதியில் “Hariharan Musical Concert and star Night” என்னும் தலைப்பில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நேற்றையதினம்(09.02.2024) இடம்பெற்றது.
தென்னிந்திய நடிகர்களும், நட்சத்திரங்களும் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியானது இலவசமாகவும் மற்றும் VIP, Online booking போன்ற வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிகழ்ச்சியின் போது குழப்பகரமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து சிறிதுநேரம் நிகழ்வு தடைபட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒழுங்கமைப்பாளர்களின் தவறான ஏற்பாட்டினால் 3,000.00 டிக்கட் பெற்றவர்களின் பகுதியில் மேடை நிகழ்ச்சிகளை பார்க்கமுடியாதளவு தூரத்தில் இருந்துள்ளது.
மேலும் VIP 1 டிக்கட் பெற்ற பார்வையாளர்கள் உள்ள பகுதியிற்கும், VIP 3 டிக்கட் பெற்ற பார்வையாளர்கள் இருந்த பகுதிகளுக்கும் இடையில் கணிசமான இடைவெளி வெற்றிடமாக இருந்ததையடுத்து பாதுகாப்பு தடைகளை மீறி பார்வையாளர்கள் சென்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பாதுகாப்பு கடமைகளிலிருந்த காவல்துறை அதிகாரியொருவர் தமிழிலும், சிங்களத்திலும் தூசண வாரத்தைகளால் திட்டியதையடுத்து குறித்த அதிகாரிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினரை இறக்கி பார்வையாளர்களின் முன்வரிசையில் நின்ற பார்வையாளர்களை தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து கோபமடைந்த பார்வையாளர்கள் பின்னால் சென்று கல்லுகளாலும் செருப்புகளாலும் எறிந்த நிலையில் முன்னிருந்த பார்வையாளர்களை தாக்கியுள்ளனர்.
அதுமட்டுமன்றி தாக்கியபோது சில காவல்துறையினர் இனரீதியான வசைபாடுதல்களையும் செய்துள்ளனர். இவ்வாறான நிலைமையிலேயே குழப்பகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி தென்னிந்திய பிரபல தொலைக்காட்சிக்கு ஒளிபரப்புவதற்கான உரிமத்தினை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுத்த நிலையில் அதுகுறித்த அறிவித்தல்கள் எதுவும் வெளியிடப்படாதது பார்வையாளர்களின் தனியுரிமை மீதான அத்துமீறலாக இருப்பதோடு அதற்காக கட்டமைக்கபட்ட கோபுர அமைப்புகளில் பார்வையாளர்கள் ஏறியதாக குற்றம்சாட்டுகின்றமை எவ்வாறான மனநிலை என்பது தெரியவில்லை.
இவ்வாறான சூழலில் காவல்துறையின் அளவுகளும் குறைக்கப்பட்டிருந்த நிலை திட்டமிட்ட சதியாகவே கருதமுடிகின்றது. இதன்மூலம் தமிழ் இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள், காவாலிகள் என்னும் பொதுப்புத்தியை கட்டமைப்பதும், பிரதேசவாதத்தினை தூண்டும் சதியாகவே பார்க்கப்படுகின்றது.
மேலும் சம்பவ இடத்தில் நரன் மீடியாவின் செய்தியாளரின் மூலம் நேரடியாக பார்த்து அறிக்கையிடப்பட்ட செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*