வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: வெடுக்குநாறி எங்களுக்குரியது! மீண்டும் சர்ச்சை! நடந்தது என்ன?


tamil news:

"வெடுக்குநாறி மலை எங்களுடையது!"

இவ்வாறு கூறுகிறார் குருந்தூர் மலையில் அத்துமீறிய பிக்கு.


அதாவது, இன்று(11.02.2024) காலை ஏறத்தாழ 8.30 மணிக்கு வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட வெடுக்குநாறி மலை சிவன் கோவிலிற்கு குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவினை மீறிய பிக்கு உட்பட கொழும்பிலிருந்து வந்த குழுவினருமாக 15 இற்கும் மேற்பட்ட நபர்கள் சென்றுள்ளனர்.

 

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு 9.00 மணியளவில் சென்ற கோவில் நிர்வாகத்தினர் கோவிலினுள் மேற்படி குழுவினர் பாதணிகளுடன் நிற்பதை பார்த்து பாதணிகளை கழட்டுமாறு கேட்ட போது கால்கள் தங்களுக்கு சுடுவதாகவும், அதனால் கழட்டமுடியாது எனவும் முரண்பட்டுள்ளனர். 


தொடர்ந்து இது தங்களுடைய இடம் எனவும் நீங்கள் ஆக்கிரமித்துள்ளீர்கள் எனவும் பிக்குவின் தரப்பில் தெரிவித்ததுடன் காணொளிகளும் பதிவுசெய்யப்பட்டன.


அதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.


அங்கு பார்த்துகொள்ளுங்கள் என கூறிய நிலையில் அங்கு சில மணிநேரங்கள் நின்றுவிட்டு குறித்த குழுவினர் சென்றுள்ளனர்.

மேலும் கடந்த காலத்தில் படிக்கட்டு வைக்கப்பட்டமை குறித்து தொல்லியல் துறை பதிவுசெய்த வழக்கு தள்ளுபடியான நிலையில் உயர்நீதிமன்றத்திலுள்ள வழக்கு மாத்திரம் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் தொல்லியல் துறை சார்ந்த இருவருடன் நெடுங்கேணி இராணுவப் புலனாய்வுத்துறையினரும் வந்திருந்த குழுவிற்கு ஒத்துழைத்து வந்திருந்தமை அடிப்படை உரிமை மீறல் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் மேற்படி குழுவினருக்குரிய வாகன ஒழுங்கமைப்பு நெடுங்கேணி பகுதி இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.