Latest news: பதிவுகள் குறித்து பாவனையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு; மீறினால் தண்டனை!!!
tamil news: இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRCSL) கையடக்க தொலைபேசிகளின் சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் பொதுமக்களின் சிம் பதிவுகளை சரிபார்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அதாவது, TRCSL இன் துணை இயக்குநர் மேனகா பத்திரன, கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் தங்கள் சிம் கார்டை சரியாகப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை(13.02.2024) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பத்திரன,
சட்டவிரோதமான செயல்களுக்குச் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பொதுமக்கள் தங்களின் கையடக்கத் தொலைபேசி சிம் கார்டுகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதனை அறிந்துகொள்ள, பொதுமக்கள் தங்கள் சிம் பதிவுகளை தங்கள் மொபைல் போன்களில் #132# என டைப் செய்து சரிபார்க்கலாம் எனவும், தொலைபேசி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு கேட்க முடியும் என பத்திரன பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மற்றவர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட சிம்களைப் பயன்படுத்தி பல சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாக அண்மைக் காலங்களில் புகார்கள் வந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுக்குத் தெரியாமல் தங்களின் பெயரில் வழங்கப்பட்ட சிம் கார்டுகளின் இணைப்பை உடனடியாக துண்டிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்கள் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சிம்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என TRCSL எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*