வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: கருத்து வேறுபாடுகளை அடக்குவது குறித்து இலங்கை கவனம் செலுத்துகின்றது: துணை ஆசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி

 


tamil news: மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்(HRW) துணை ஆசியப் பணிப்பாளர், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான பிரச்சினைகளில் இலங்கை 'தலைகீழாகச் செல்கின்றது' என எச்சரித்துள்ளார்.


மனித உரிமைகள் மீதான கருத்து சுதந்திரத்தினை நசுக்குவதற்கும், அடக்குமுறைச் சட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழ் சமூக உறுப்பினர்களை தொடர்ந்து இலக்கு வைப்பதன் ஊடாக சர்வதேச கவனத்தை மட்டுப்படுத்துவதற்கும் ரணில் கவனம் செலுத்துவதாக HRW இன் துணை ஆசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.


மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் கடமைகளை வெளிப்படுத்தும் வகையில் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சுகளுக்கிடையேயான தமது ஆரம்பக் கூட்டத்தை இலங்கை அரசாங்க அதிகாரிகள் நடத்திய நிலையில் குறித்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மனித உரிமைகள் தொடர்பான அமைச்சுகளுக்கிடையேயான நிலைக்குழுவின் ஆரம்பக் கூட்டத்தில் 'ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபடுவதுடன், உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உறுதியான முன்னேற்றத்தை முன்னெடுப்பதில் உறுதியாகவுள்ளது.' என கூறியுள்ளார்.


ஆனால் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது சமீபத்திய அறிக்கையில், 

"1990 களில் இருந்து தொடர்ந்துவந்த இலங்கை அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய குறைந்தது 10 ஆணைக்குழுக்களை நியமித்துள்ளன.

புதிய சட்டம் வெறுமனே முந்தைய தோல்வியுற்ற முயற்சிகளை பிரதிபலிக்கின்றது,

பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் புறக்கணிக்கின்றது மற்றும் இலங்கையின் சர்வதேச சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் பின்தங்கியிருக்கின்றது.

சமூக நீதி மற்றும் உரிமைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம், மனித உரிமைகள் மீதான சர்வதேச கவனத்தை மட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது"

என்று கங்குலி எச்சரித்துள்ளார்.


விக்கிரமசிங்கவின் அரசாங்கம் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதில்களை வழங்குவதாகவும், துஷ்பிரயோகங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதாகவும் உறுதியளித்ததாக குறித்த அமைப்பு கூறியுள்ளது.


அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் சர்வதேச கவனத்தின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன. இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் சட்டமூலத்தை, உள்நாட்டுப் போரிற்கான தீர்வு காண்பதாகக் கூறப்படும் நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் மௌனமாகவும், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஒடுக்கவும் செய்கின்றார்கள்.


மேலும் இலங்கையின் சர்வதேச சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் குறைhக உள்ளது.


பல பாதிக்கப்பட்டவர்கள் "தங்களுக்கு கமிஷன் சோர்வாக இருப்பதாகக் கூறுகின்றார்கள், மேலும் அவர்களின் சாட்சியத்தை மீண்டும் வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை, மீண்டும் மீண்டும் பாதுகாப்புப் படைகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் உள்ளன."


மேலும் போரில் இறந்தவர்களின் நினைவு கூறும் தமிழ் சமூகத்தினரை கைதுசெய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும், வடகிழக்கில் உள்ள சமய தலங்கள் உட்பட தமிழ் மற்றும் முஸ்லிம் நிலங்களை அபகரிக்கும் அரசாங்க நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் HRW கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*