Latest news: ஆன்லைன் பாதுகாப்பு சட்டம்; சபாநாயகருக்கு எதிராக சுமந்திரன் வழக்கு!
tamil news: இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் சட்டமாக அமுல்படுத்தப்பட்டதாக சபாநாயகர் சான்றளித்ததை எதிர்த்து ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று முன்தினம் (பெப்ரவரி 14) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தில் செப்டம்பர் 18, 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டு;ளது. அதன் பின்னரே அக்டோபர் 3, 2023 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்துப் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் இந்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நவம்பர் 7, 2023 அன்று நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
சட்டமூலம் சட்டமாக இயற்றப்படுவதற்கு பல சரத்துக்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2ஃ3 பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றத் தீர்மானம் கூறியது.
இருப்பினும், குறிப்பிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டால், இந்த சட்டமூலத்தினை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் தீர்மானம் கூறியது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது மனுவில், உச்ச நீதிமன்றத் தீர்மானத்தை முழுமையாகக் கடைப்பிடிக்காமல் அரசாங்கம் சட்டமூலத்தை நிறைவேற்ற முற்படுவதாகவும், குழு நிலை திருத்தங்கள் வரைவு குறைபாடுகளை போதுமான அளவு நிவர்த்தி செய்யப்படாமலிருப்பதாகவும் சுட்டிக்காட்டியதாகவும், எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சுமந்திரனின் கூற்றுப்படி தீர்மானத்திற்கு முழுமையாக இணங்குவதை உறுதிசெய்வதற்கு முன்னர் பாராளுமன்றம் சட்டமூலத்தின் மீது வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்றத்திற்கு தேவையான அனைத்து மாற்றங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த சட்டமூலத்தை தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருக்க முடியும் என கூறுகிறார். இதற்கு இணைக்கப்படாவிட்டால்இ மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2ஃ3 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தால் மட்டுமே இதனை நிறைவேற்றியிருக்க முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்தச் சட்டமூலத்திற்கு அங்கிருந்த பெரும்பான்மையான உறுப்பினர்களினால் மாத்திரமே அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், எனவே சட்டமூலம் சட்டமாகியிருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சபாநாயகர், சட்டமூலம் சட்டமாக்கப்பட்டது என சான்றளித்ததன் மூலம்இ சுமந்திரனுக்கும் குடிமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையையும் அடிப்படை உரிமைகளையும் மீறியுள்ளார்.
சபாநாயகரின் கருத்துப்படி சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க தான் செயற்பட்டதாகவும், அப்படியானால் சட்டமூலத்தின் சான்றளிக்கப்பட்டதாக கூறப்படும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு சட்டமா அதிபரும் பொறுப்பு என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் விண்ணப்பத்தின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*