Latest news: மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்!
tamil news: மன்னாரில் தனது வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி வழக்கில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் என மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதாவது, குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை காவல்துறை கைதுசெய்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, சந்தேக நபரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் பெப்ரவரி 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் கடந்த திங்கட்கிழமை(19.02.2024) உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து ஆரம்பத்தில்,சந்தேகநபர் 24 மணிநேரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து தாமதமின்றி நீதி வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் புகைப்படங்களை தாங்கியவாறு நீதி கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னர் வடகிழக்கு முழுவதும் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களின் விற்பனை மற்றும் பாவனை அதிகரித்து வருகின்றது.
இலங்கை இராணுவத்தின் உதவியுடன் தமிழ் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு தள்ளப்படுவதாகவும், அண்மைய ஆண்டுகளில் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையின் உயர்மட்டக் கைதுகள் வழமையாக காணப்படுவதாகவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 2015ம் ஆண்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் போதைப்பொருள் பணியகத்தின்(PNடீ) சுமார் 12 க்கும் மேற்பட்ட சிங்கள காவல்துறை அதிகாரிகள் சட்டவிரோத போதைப்பொருள் கும்பலில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டமை,
மாளிகாவத்தை வீடமைப்புத் தொகுதியில் காவல்துறை காவலிலிருந்த பிரபல போதைப்பொருள் மன்னன் மாகந்துரே மதுஷின் கொலையானது, போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 80 அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு
என்பன போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் அதிகரித்துள்ளமைக்கு இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*