வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: செய்தி சேகரிக்க சென்ற தமிழ் ஊடகவியலாளர்களை மிரட்டிய சிங்கள இராணுவம்!


tamil news: யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியிலுள்ள உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட கோவிலுக்குச் செல்லும் பொதுமக்களிடம் செய்தி சேகரிக்க முயன்ற தமிழ் ஊடகவியலாளர்களான பிரபாகரன் திலக்சன், சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன் மற்றும் சின்னையா யோகேஸ்வரன் ஆகிய 3 தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள 21 கோவில்களில் ஏழு கோவில்களுக்கு,

இலங்கை இராணுவம் அண்மையில் வழிபாட்டாளர்கள் இராணுவ போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் 

கோவில்களுக்குச் செல்வதற்கு அவர்களின் வீட்டு முகவரியை வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கியிருந்தது.



இந்த கோவில்களின் பட்டியலில் பலாலி ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.


இந்நிலையில் பொது வழிபாட்டிற்காக சமீபத்தில் திறக்கப்பட்ட கோவிலில், நேற்று(23.02.2024) காலை மக்கள் திரளாக பிரார்த்தனை செய்ய ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.


ஊடகவியலாளர்கள் நிகழ்வைப் பற்றி பொதுமக்களின் கருத்துகளை கேட்க வந்தபோது, இராணுவத்தினரhல் அச்சுறுத்தப்பட்டு அவர்களின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு புகைப்படங்கள் அழிக்கப்பட்டன.


மேலும் திருகோணமலையிலுள்ள 4 பௌத்த விகாரைகள் உட்பட சுமார் 11 பௌத்த விகாரைகள் புனிதமானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*