வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: இலங்கை விமானப்படை தமிழர் நிலத்தை விடுவிக்க வேண்டும்! ராஜபக்சவின் கூட்டாளி.


tamil news: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்(SLFP) பாராளுமன்ற உறுப்பினரும், ராஜபக்சவின் கூட்டாளியுமான அங்கஜன் ராமநாதன், தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு தொடர்வதாகவும், வடகிழக்கில் விமானப்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் விடுவிக்குமாறு இலங்கை இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.


அதாவது,

"விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு நாளை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட உள்ளது. விமானப்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்படுவது மட்டுமே பொருத்தமானது.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நிலத்தை அபகரித்து நினைவேந்தல் போன்ற பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது"

என்று கூறினார்.


இராமநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பல வருடங்களைச் செலவிட்டுள்ளதுடன் ராஜபக்சவின் நன்கு அறியப்பட்ட கூட்டாளியாகவும் உள்ள நிலையில் ராஜபக்சவின் ஆட்சியில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், இராணுவம் விரிவுபடுத்தப்பட்டது மற்றும் வடகிழக்கில் பரந்த நிலப்பரப்பு கைப்பற்றப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேசிய இராமநாதன், கடற்படையினரால் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள மாதகல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டு நிலத்தில் சிங்கள பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுவரும் தையிட்டி போன்றவற்றை எடுத்துக்காட்டுவதாக கூறினார்.


துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக பலாலியை ஒட்டிய காணிகளைக் கோருவதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார்.


இதற்கு முன்னர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னும் நஷ்டஈடு கூட வழங்கப்படவில்லை என கூறிய உவர், விரைவில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு இந்த விடயங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*