Latest news: ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு செய்வதாக வாக்களித்தார் மோடி! மதுரை ஆதின பீடாதிபதி
tamil news: இந்தியாவால் இலங்கைக்கு வழங்கிய கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர் பகுதியை தனிநாடாக மாற்ற வேண்டுமென மதுரை ஆதீனத்தின் பீடாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் கோரிக்கை விடுத்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு இந்தியப் பிரதமர் நேற்று முன்தினம்(27.02.2024) வந்தபோது மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியை வழியில் சந்தித்து தனது வாகனத் தொடரணியை நிறுத்திப் பேசினார்.
இவ்வாறு இடம்பெற்ற பேச்சு தொடர்பில் மதுரை ஆதீனத்தின் பீடாதிபதி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
"கச்சதீவு இலங்கை அரசின் வசமிருப்பதால் இந்திய மீனவர்கள் கஷ்டப்படுகின்றார்கள்.
எனவே, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வழங்கிய கச்சதீவை மீட்க வேண்டும்.
மேலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
அங்கு தமிழர் பகுதியை தனி நாடாக மாற்ற வேண்டும்.
இப்படி இந்தியப் பிரதமரிடம் நேரில் கோரிக்கை விடுத்தேன்.
இவற்றைக் கேட்ட பிரதமர் அவற்றைச் செய்வதாகக் கூறியுள்ளார்"
என்றார்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*