Latest news: காவல்துறை பொறுப்பதிகாரியால் காவல்துறை கான்ஸ்டபிள் துஷ்பிரயோகம்!
tamil news: பெண் காவல்துறை கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்பிட்டி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் உத்தரவுக்கமைய, கட்டுபொட காவல்துறைப் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்பிட்டி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியாகவுள்ள காவல்துறை பரிசோதகர் மீது பல சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதிப் பிரச்சினைகள் சுமத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில், கல்பிட்டி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி தனது காவல்துறை நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
இச்சம்பவத்தை எதிர்கொண்ட புதிய காவல்துறை கான்ஸ்டபிள், காவல்துறை நிலையத்திற்குப் பொறுப்பான உதவிப் காவல்துறை அத்தியட்சகரிடம் தெரிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபருக்கு பதில் காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 29ம் திகதி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கால்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் வாக்குமூலம் பெறுவதற்காக கட்டுபொட காவல்துறைப் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு பொறுப்பான காவல்துறை பரிசோதகர் கல்பிட்டி காவல்துறை நிலையத்திற்கு வந்திருந்த போதிலும், அதற்குள் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி சுகயீன விடுமுறைக்கு விண்ணப்பித்து காவல் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலும் சுகயீன விடுமுறையில் சென்ற குறித்த பொறுப்பதிகாரியின் இருப்பிடத்தை இதுவரை விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*