வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: காத்திருந்த ஈழத்தமிழர்களுக்கு பேரதிர்ச்சி! சாந்தன் சென்னையில் காலமானார்.


tamil news: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரான சாந்தன் அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமானதாக மருத்துவமனை அதிகாரிகள் இன்று(28.02.2024) காலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.


சுமார் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து 2022 நவம்பரில் வேலூரில் உள்ள மத்திய சிறையில் இருந்து மற்ற ஐந்து சந்தேகநபர்களுடன் இலங்கையைச் சேர்ந்த சாந்தன் விடுவிக்கப்பட்டார்.


இவர்களின் சிறையில் நன்நடத்தையைக் காரணங்காட்டி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். 


தொடர்ந்து கடந்த வாரம், மத்திய வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி(குசுசுழு) சாந்தனுக்கு அவசர பயண ஆவணத்தை வழங்கி அவர் இலங்கைக்கு திரும்புவதற்கு உதவியது.


அதாவது,

மே 21, 1991 அன்று இரவு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தாணு என்ற பெண்ணால் படுகொலை செய்யப்பட்டார்.


இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இதனையடுத்து நளினி ஸ்ரீஹரன், ஆர்.பி.ரவிச்சந்திரன், ஜெயக்குமார், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஏ.ஜி. பேரறிவாளன் உள்ளிட்ட 7 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இந்நிலையில், சாந்தனும், நளினி ஸ்ரீஹரன், ஸ்ரீஹரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 5 குற்றவாளிகளும் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசத்திற்குப் பிறகு வெவ்வேறு சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


2000ம் ஆண்டு நளினி ஸ்ரீஹரனின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின்னர் 2014ம் ஆண்டு, மற்ற 6 குற்றவாளிகளின் தண்டனையும் குறைக்கப்பட்டது.


அதே ஆண்டில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இந்த வழக்கில் ஏழு குற்றவாளிகளையும் விடுவிக்க பரிந்துரைத்தார்.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*